தொழில்நுட்பம்

ஒன்பிளஸ் 7 ப்ரோ அல்மாண்ட் எடிஷன் இந்திய விற்பனை தேதி

Published On 2019-06-08 09:41 GMT   |   Update On 2019-06-08 09:41 GMT
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 7 ப்ரோ அல்மாண்ட் எடிஷனின் விற்பனை தேதியை அறிவித்துள்ளது.



ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் தனது ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனினை ரூ.48,999 விலையில் கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இதன் மிரர் கிரே எடிஷன் மே 17 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது. பின் ஒன்பிளஸ் 7 ப்ரோ 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மற்றும் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி கொண்ட நெபுளா புளு வேரியண்ட் மே 28 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், ஒன்பிளஸ் 7 ப்ரோ அல்மாண்ட் எடிஷன் ஸ்மார்ட்போன் ஜூன் 14 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய அல்மாண்ட் எடிஷன் அமேசான், ஒன்பிளஸ் வலைதளம், ஒன்பிளஸ் பிரத்யேக விற்பனை மையங்கள், குரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனை மையங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 7 ப்ரோ அல்மாண்ட் எடிஷனின் முன்பதிவு நேற்று (ஜூன் 7) துவங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ.2000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவுகள் அனைத்து ஒன்பிளஸ் பிரத்யேக ஆஃப்லைன் விற்பனை மையங்கள், ரிலையன்ஸ் டிஜிட்டல், மை ஜியோ ஸ்டோர், குரோமா, பூர்விகா, சங்கீதா மற்றும் விஜய் சேல்ஸ் போன்ற இடங்களில் நடைபெறுகிறது.

புதிய ஸ்மார்ட்போனை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.2000 வரை கேஷ்பேக் பெற முடியும். இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.



ஒன்பிளஸ் 7 ப்ரோ சிறப்பம்சங்கள்:

- 6.67 இன்ச் 3120x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. + 19.5:9 ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே
- 3D கார்னிங் கொரில்லா கிளாஸ்
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- 8 ஜி.பி. / 12 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 9.5
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.6, 1/2.25″ சோனி IMX586, 0.8μm பிக்சல், OIS, EIS
- 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, 1.0 μm பிக்சல், OIS
- 16 எம்.பி. 117° அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471, f/2.0, 1.0μm பிக்சல்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப்-சி, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ராப் சார்ஜ் 30 ஃபாஸ்ட் சார்ஜ்
Tags:    

Similar News