தொழில்நுட்பம்

இந்தியாவில் விலை குறைக்கப்பட்ட ரியல்மி ஸ்மார்ட்போன்

Published On 2019-02-16 07:59 GMT   |   Update On 2019-02-16 07:59 GMT
ஒப்போவின் துணை பிராண்டான ரியல்மி இந்தியாவில் தனது ஸ்மார்ட்போனின் விலையை ரூ.1000 வரை குறைத்திருக்கிறது. #Realme2Pro #Smartphone



இந்தியாவில் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,000 குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை குறைப்பு ரியல்மி 2 ப்ரோ மாடலினஅ 4 ஜி.பி. ரேம் மற்றும் 6 ஜி.பி. ரேம் வெர்ஷன்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

அறிமுகமானது முதல் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்படாமலேயே இருந்தது. முன்னதாக ரியல்மி பிராண்டு தனது யு1 ஸ்மார்ட்போனினை விலையை மட்டும் சமீபத்தில் குறைத்திருந்தது.

விலை குறைப்பைத் தொடர்ந்து ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம் / 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.12,990 என்றும் 6 ஜி.பி. ரேம் / 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ.14,990 விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன்கள் ரூ.13,990 மற்றும் ரூ.15,990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம் / 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ.17,990 விலையில் அறிவிக்கப்பட்டது. எனினும், இந்த வேரியண்ட் விற்பனை செய்யப்படவில்லை. ரியல்மி 2 ப்ரோ போன்று ரியல்மி யு1 ஸ்மார்ட்போனின் விலையும் ரூ.1000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.10,999 விலையில் கிடைக்கிறது.



ரியல்மி 2 ப்ரோ சிறப்பம்சங்கள்:

- 6.3 இன்ச் 1080x2340 பிக்சல் 19.5:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm பிராசஸர்
- அட்ரினோ 512 GPU
- 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
- 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- கலர் ஓ.எஸ். 5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, சோனி IMX398 சென்சார், டூயல் பிக்சல் ஃபோக்கஸ், EIS
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஐஸ் லேக், பிளாக் சீ மற்றும் புளு ஓசன் நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News