தொழில்நுட்பம்

இந்தியாவில் ரூ.1000 குறைக்கப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்

Published On 2019-02-02 03:15 GMT   |   Update On 2019-02-02 03:15 GMT
ஒப்போ நிறுவனத்தின் ஏ7 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் ரூ.1000 குறைக்கப்பட்டிருக்கிறது. புதிய விலையில் ஒப்போ ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கியது. #OppoA7 #Smartphone



ஒப்போ நிறுவனத்தின் ஏ7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.14,990 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் ஒப்போ ஏ7 (3 ஜி.பி. ரேம்) ஸ்மாரட்போனின் விலை தற்சமயம் ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.13,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒப்போ ஏ7 புதிய விலையில் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகிறது. ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட டிஸ்ப்ளே மற்றும் 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 1520x720 பிக்சல் வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி, 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இருவித வேரியன்ட்களில் கிடைக்கிறது.



ஒப்போ ஏ7 சிறப்பம்சங்கள்:

- 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 1520x720 பிக்சல் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர்
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்.பி. பிரைமரி கேமரா
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 16 எம்.பி செல்ஃபி கேமரா
- 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த கலர் ஓ.எஸ். 5.2
- டூயல் சிம் ஸ்லாட், ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்

புதிய ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் கிளேரிங் கோல்டு, கிளேஸ் புளு நிறங்களில் கிடைக்கும் நிலையில் புன்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News