தொழில்நுட்பம்

ஹீலியோ P70 பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் வெளியிடும் சீன நிறுவனம்

Published On 2018-11-17 08:13 GMT   |   Update On 2018-11-17 08:13 GMT
சீன ஸ்மார்ட்போன் பிரான்டு ரியல்மி ஹீலியோ P70 பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. #Realme



ரியல்மி நிறுவனம் மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை யு சீரிஸ் மாடலாக வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. 

முன்னதாக மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸர் இந்தியா மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்களை ரியல்மி வெளியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸரில் 12 நானோமீட்டர் ஃபின்ஃபெட் தொழில்நுட்பத்தைச் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த பிராசஸரில் வேகமான ஏ.ஐ. பிராசஸிங் செய்ய ஏதுவாக 525 மெகாஹெர்ட்ஸ் மல்டி-கோர் ஏ.பி.யு. ஆப்பரேட்டிங் கொண்டிருக்கிறது. 




இந்த ஏ.ஐ. என்ஜின் ஹீலியோ P60 பிராசஸரை விட ஏ.ஐ. பிராசஸிங்கை 10 முதல் 30 சதவிகிதம் வரை மேம்படுத்துகிறது. இதனுடன் ARM மாலி-G72 MP3 GPU அதிகபட்சம் 900 மெகாஹெர்ட்ஸ் ஆப்பரேட்டிங் கொண்டுள்ளது. இது முந்தைய ஹீலியோ P60 பிராசஸரில் வழங்கப்பட்டு இருந்ததை விட 13 சதவிகிதம் வேகமான செயல்திறன் கொண்டிருக்கிறது.

அதிக செயல்திறன் எடுத்துக்கொள்ளும் அதிநவீன கேம்களை விளையாடும் போதும் P70 பிராசஸர் முந்தைய ஹீலியோ பிராசஸரை விட 7 சதவிகிதம் சிறப்பாக செயல்படுவதோடு 35 சதவிகிதம் குறைவான மின்சக்தியை பயன்படுத்துகிறது. இந்த பிராசஸர் 20:9 ரக டிஸ்ப்ளேக்களை முழுமையான ஹெச்.டி. பிளஸ் ரெசல்யூஷனில் சப்போர்ட் செய்யும்.

ஹீலியோ P70 ரக பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் அடுத்த மாதம் முதல் கிடைக்கும் என மீடியாடெக் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அந்த வகையில் ரியல்மியின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News