தொழில்நுட்பம்

ரூ.29 விலையில் பி.எஸ்.என்.எல். அறிவித்த சலுகையில் மாற்றம்

Published On 2018-10-05 05:53 GMT   |   Update On 2018-10-05 05:53 GMT
பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடந்த மாதம் அறிவித்த ரூ.29 சலுகையை மாற்றியமைத்துள்ளது. இது குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #BSNL



ஆகஸ்டு மாதத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் பல்வேறு பிரீபெயிட் சலுகைகளை அறிவித்தது. இவற்றில் ரூ.29 விலையில் அறிவிக்கப்பட்ட சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை ஏழு நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

தற்சமயம் இந்த சலுகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பி.எஸ்.என்.எல். ரூ.29 சலுகையில் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

ரூ.29 சலுகையுடன் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.9 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. இந்த சலுகையில் 100 எம்.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இதில் ரோமிங் அழைப்புகளும் அடங்கும், எனினும் மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களில் பொருந்தாது.

பி.எஸ்.என்.எல். ரூ.29 விலை சலுகையை மாற்றி அதன் பலன்களை குறைத்திருக்கும் நிலையிலும், போட்டி நிறுவனங்கள் வழங்கும் சலுகையை விட சிறப்பானதாக இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ ரூ.52 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 150 எம்.பி. டேட்டா ஏழு நாட்களுக்கு வழங்குகிறது.

ஏர்டெல் மற்றும் வோடபோன் சலுகைகள் ரூ.59 மற்றும் ரூ.47 விலையில் கிடைக்கின்றன. ஏர்டெல் சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் 1 ஜி.பி. டேட்டா வழங்குகிறது. வோடபோன் சலுகையில் தினமும் 125 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால், 500 எம்.பி. டேட்டா, 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
Tags:    

Similar News