தொழில்நுட்பம்

இந்தியாவில் போகோபோன் எஃப்1 ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது

Published On 2018-08-18 06:10 GMT   |   Update On 2018-08-18 06:10 GMT
சியோமியின் போகோபோன் எஃப்1 ஸ்மார்ட்போன் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் நிலையில், இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #AsFastAsYou #POCOPHONEF1


சியோமி நிறுவனத்தின் போகோ பிரான்டு இந்தியாவில் போகோபோன் எஃப்1 ஸ்மார்ட்போனினை விரைவில் வெளியிட இருக்கிறது.

ஒப்போ நிறுவனத்தின் ரியல்மி சியோமிக்கு போட்டியாக, சியோமியின் புதிய போகோ பிரான்டு துவங்கப்படுவதாக கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் போகோபோன் என டீஸ் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் போகோ என்று டீஸ் செய்யப்பட்டது.

ஆகஸ்டு 22-ம் தேதி இந்தியாவில அறிமுகமாகும் போகோபோன் எஃப்1 இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்மார்ட்போனின் விளம்பர தூதராக பி.வி. சிந்து நியமிக்கப்பட்டு இருப்பதையும் புதிய அறிவிப்பு உணர்த்துகிறது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை போகோபோன் எஃப்1 மாடலில் 6.0 இன்ச் 19:9 ரக டிஸ்ப்ளே, நாட்ச் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், லிக்விட் கூலிங் வசதி, 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, டூயல் பிரைமரி கேமரா, ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக், பின்புறைம் கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.



போகோபோன் எஃப்1 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

- 5.99 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
- அட்ரினோ 630 GPU
- 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9.0
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல்
- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
- 20 எம்பி செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இஷ வைபை, ப்லூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

சியோமி போகோபோன் எஃப்1 ஸ்மார்ட்போனின் டீசர் மட்டுமே வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதன் முழு விவரங்கள் அடுத்த வாரம் தெரியவரும். முதற்கட்டமாக இந்தியாவில் அறிமுகமாகும் போகோபோன் அதன்பின் சர்வதேச சந்தைளில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. #AsFastAsYou #POCOPHONEF1
Tags:    

Similar News