தொழில்நுட்பம்

ரூ.6,799 முதல் ஃபேஸ் அன்லாக் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2018-08-14 06:32 GMT   |   Update On 2018-08-14 06:32 GMT
டெக்னோ நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் மலிவு விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. #smartphone


டெக்னோ நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கெமான் ஐ.ஏஸ். 2 மற்றும் ஐ.ஸ்கை. 2 அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன்களில் 6.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக ஃபுல் வியூ டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் சிப்செட், 2 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் Hi ஓ.எஸ். கொண்டுள்ளது. 

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ், கெமான் ஐ.ஸ்கை. 2 மாடலில் இரண்டாவது வி.ஜி.ஏ. கேமரா வழங்கப்பட்டுள்ளது. கேமான் ஐ.ஸ்கை. 2 மாடலின் முன்பக்கம் 8 எம்பி கேமராவும், பின்புறம் 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

இரன்டு டெக்னோ கெமான் ஸ்மார்ட்போன்களிலும் ஃபேஸ் அன்லாக் வசதி, டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், 3050 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கெமான் ஐ.ஸ்கை. 2 மாடலின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.



டெக்னோ கெமான் ஐ.ஏஸ். 2 சிறப்பம்சங்கள்

- 5.5 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்
- பவர் வி.ஆர். ரோக் GE8100 GPU
- 2 ஜிபி ரேம்
- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- Hi ஓ.எஸ். சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ், f/2.0
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, டூயல் எல்இடி ஃபிளாஷ்
- ஃபேஸ் அன்லாக்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3050 எம்.ஏ.ஹெச் பேட்டரி



டெக்னோ கெமான் ஐ.ஸ்கை. 2 சிறப்பம்சங்கள்

- 5.5 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்
- பவர் வி.ஆர். ரோக் GE8100 GPU
- 2 ஜிபி ரேம்
- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- Hi ஓ.எஸ். சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-எல்இடி ஃபிளாஷ், f/2.0
- இரண்டாவது வி.ஜி.ஏ. கேமரா
- 13 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
- கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3050 எம்.ஏ.ஹெச். பேட்டரி

டெக்னோ கெமான் ஐ.ஏஸ். ஷேம்பெயின் கோல்டு, மிட்நைட் பிளாக் மற்றும் மிட்நைட் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.6,799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கெமான் ஐ.ஸ்கை. 2 ஸ்மார்ட்போன் ஷேம்பெயின் கோல்டு, மிட்நைட் பிளாக் மற்றும் போர்டாக்ஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.7,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் டெக்னோ கெமான் ஐ.ஏஸ். விற்பனை ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், கெமான் ஐ.ஸ்கை. 2 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 20-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் இந்தியா முழுக்க சுமார் 35,000-க்கும் அதிகமான விற்பனையகங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய டெக்னோ ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு ரூ.2,200 மதிப்புள்ள ஜியோ கேஷ்பேக் சலுகை வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகிறது. பயனர்கள் ரூ.198/ரூ.299 ரீசார்ஜ் செய்து கேஷ்பேக் பெறலாம். இத்துடன் ஒரு வருடத்திற்கு ஒருமுறை திரையை இலவசமாக மாற்றிக்கொள்ளும் வசதி, 100 நாட்களில் ஸ்மார்ட்போனினை திரும்ப வழங்கும் வசதி, மற்றும் ஒரு மாதத்திற்கு கூடுதல் வாரண்டி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News