தொழில்நுட்பம்
கோப்பு படம்

குறைந்த விலையில் போஸ்ட்பெயிட் சலுகைகளை அறிமுகம் செய்த வோடபோன்

Published On 2018-07-03 04:36 GMT   |   Update On 2018-07-03 04:36 GMT
வோடபோன் நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு குறைந்த கட்டணத்தை உறுதி செய்யும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.




வோடபோன் நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய சலுகைகளுடன் மொபைல் இன்சூரன்ஸ், அன்லிமிட்டெட் சர்வதேச ரோமிங் சலுகைகள், பொழுதுபோகுக்கு தரவுகள் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ரெட் பேசிக் சலுகை விலை ரூ.299 முதல் துவங்கி அதிகபட்சம் சிக்னேச்சர் சலுகை விலை ரூ.2,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



வோடபோன் ரெட் சலுகைகள்:

குறைந்த மாத கட்டணம் உறுதி - ரெட் போஸ்ட்பெயிட் சலுகைகளில் பயனருக்கு ஏற்ற மிகச்சிறந்த சலுகையை ஆப்டிமைசேஷன் தொழில்நுட்பத்தின் மூலம் குறைந்த கட்டணத்தை ஒவ்வொரு மாதமும் உறுதி செய்கிறது. இதனால் ரெட் போஸ்ட்பெயிட் பயனர்கள் எவ்வித அதிர்ச்சியும் கொள்ள வேண்டியதில்லை.

ரெட் டுகெதர் (RED Together):

இந்த சலுகையில் பயனர்கள் தங்களின் நண்பர்கள், குடும்பத்தார் மற்றும் இதர சாதனங்களை ரெட் சேவையின் கீழ் கொண்டு வந்து, மொத்த கட்டணத்தில் அதிகபட்சம் 20% வரை சேமிக்க முடியும். இதன் மூலம் அனைவருக்கும் ஒரே கட்டணமாக செலுத்த முடியும்.



என்டர்டெயின்மென்ட் (Entertainment):

என்டர்டெயின்மென்ட் சலுகையின் கீழ் அமேசான் பிரைம் சேவைகளுக்கு 12 மாத இலவச சந்தா, 12 மாதங்களுக்கு வோடபோன் பிளே இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் அன்லிமிட்டெட் தொலைகாட்சி, புதிய திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை பார்க்க முடியும். ரெட் இன்டர்நேஷனல், ரெட் இன்டர்நேஷனல் பிளஸ், ரெட் சிக்னேச்சர் மற்றும் ரெட் சிக்னேச்சர் பிளஸ் சலுகைகளில் அதிகபட்சம் 12 மாதங்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது.

சர்வதேச ரோமிங்:

உலகின் 20 நாடுகளுக்கு அன்லிமிட்டெட் இலவச அழைப்புகள் மற்றும் டேட்டா உள்ளிட்டவை நாள் ஒன்றுக்கு ரூ.180 விலையில் ஆட்-ஆன் பேக் வடிவில் வழங்கப்படுகிறது.

மொபைல் இன்சூரன்ஸ்:

ரெட் என்டர்டெயின்மென்ட் பிளஸ் சலுகை மற்றும் அதற்கும் அதிக விலையில் சலுகைகளை தேர்வு செய்யும் பயனர்களுக்கு மொபைல் இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களை எவ்வித சேதங்களில் இருந்தும் பாதுகாத்து கொள்ள முடியும். வாழ்நாள் முழுக்க பயனர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் தங்களது ஸ்மார்ட்போனினை மாற்றிக் கொண்டு புதிய சாதனத்திற்கும் இன்சூரன்ஸ் பெற முடியும்.
Tags:    

Similar News