தொழில்நுட்பம்

லீபோன் டேசென் 6ஏ இந்தியாவில் அறிமுகம்

Published On 2018-06-19 08:52 GMT   |   Update On 2018-06-19 08:52 GMT
லீபோன் நிறுவனத்தின் புதிய டேசென் 6ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.




லீபோன் நிறுவனத்தின் டேசென் 6ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.7 இன்ச் ஹெச்டி பிளஸ் 2.5D விளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் மீடியாடெக் MT6737H சிப்செட், 3 ஜிபி ரேம். ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 0.3 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கபப்ட்டுள்ளது. ஃபேஸ் அன்லாக் வசதி கொண்டிருக்கும் டேசென் 6ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது. 



லீபோன் டேசென் 6ஏ சிறப்பம்சங்கள்:

- 5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6737H 64-பிட் பிராசஸர்
- மாலி-T720 GPU
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட்
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 0.3 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
- 3000 எம்ஏஹெச் பேட்டரி

லீபோன் டேசென் 6ஏ ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் லீபோன் டேசென் 6ஏ விலை ரூ.7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News