தொழில்நுட்பம்

ஒன்று கூடும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சாவன்

Published On 2018-03-24 08:07 GMT   |   Update On 2018-03-24 08:07 GMT
ரிலையன்ஸ் ஜியோ மியூசிக் மற்றும் சாவன் செயலி ஒன்றிணைய இருப்பதாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மும்பை:

ஜியோ மியூசிக் மற்றும் சாவன் செயலி ஒன்றிணைய இருப்பதாகவும், இரு நிறுவனங்களிடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தியாகி உள்ளது என ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது. 

இருநிறுவனங்கள் இணைப்பு ஒற்றை தளமாக சர்வதேச அளவில் பிரபலப்படுத்துவது, ஒரிஜினல் தரவுகளில் அதிக கவனம் செலுத்துவது மற்றும் தனித்துவ கலைஞர்களுக்கான (independent artist) சந்தையை உருவாக்குவது, விளம்பர ரீதியாக மிகப்பெரிய மொபைல் தளமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அறிவித்துள்ளது.

புதிய கூட்டணி மற்றும் நிறுவன வளர்ச்சியில் ரிலையன்ஸ் நிறுவனம் பத்து கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இதில் இரண்டு கோடி டாலர்கள் புதிய சேவையை உலகின் முன்னணி இடத்திற்கு கொண்டு செல்லும் வகையில் விரிவாக்க பணிகளுக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது.

தற்சமயம் கிடைக்கும் அனைத்து தளங்களிலும் இந்த செயலி தொடர்ந்து கிடைக்கும். சாவன் இணை நிறுவனர்களான ரிஷி மல்ஹோத்ரா, பரம்தீப் சிங் மற்றும் வினோத் பட் ஆகியோர் தொடர்ந்து தலைமை பதவிகளில் வகித்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் சாவன் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குகளை ரிலையன்ஸ் கைப்பற்ற இருக்கிறது. சாவன் நிறுவனத்தில் டைகர் குளோபல் மேனேஜ்மென்ட், லிபர்டி மீடியா மற்றும் பெர்டெல்ஸ்மேன் மற்றும் சில நிறுவனங்ள் பங்குதாரர்களாக உள்ளன.
Tags:    

Similar News