தொழில்நுட்பம்

தினமும் 5 ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா புதிய சலுகை

Published On 2018-03-23 10:01 GMT   |   Update On 2018-03-23 10:01 GMT
ஐடியா செல்லுலார் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 5ஜிபி டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக ஐடியா செல்லுலார் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. 

ஐடியா ரூ.998 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய ஐடியா சலுகை ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வரும் ரூ.799 சலுகைக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. 

இத்துடன் புதிய சலுகை ஐடியா ஆப் மற்றும் வலைத்தளம் மூலம் ரீசார்ஜ் செய்வோருக்கு மேஜிக் ஆஃபருடன் வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,300 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ரூ.998 சலுகையில் 100 வெவ்வேறு எண்களுக்கு தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சலுகை ஒடிசா வட்டாரத்தில் மட்டும் வழங்கப்பட்டாலும், இதே சலுகை கர்நாடகா வட்டாரத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. கர்நாடகாவில் ஐடியா மேஜிக் கேஷ்பேக் வழங்கப்படவில்லை. ஐடியா ரூ.998 மற்றும் ரூ.799 சலுகையில் தினமும் 5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் வழங்கப்படும் நிலையில், ஏர்டெல் ரூ.799 சலுகையில் தினமும் 3.5 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

ரூ.998 சலுகை மட்டுமன்றி ரூ.1,298 சலுகையில் தினமும் 7 ஜிபி டேட்டா 35 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. எனினும் இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவையும் ஐடியா மேஜிக் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News