தொழில்நுட்பம்

மார்ச் 13-இல் புதிய ஸ்மார்ட்போன் வெளியிடும் சியோமி

Published On 2018-03-08 10:28 GMT   |   Update On 2018-03-08 10:28 GMT
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மார்ச் 13-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதை அந்நிறுவனம் புதிய டீசரில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

சியோமி நிறுவனத்தின் விலை குறைந்த ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன. நேரலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், வீடியோ இறுதியில் புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்த டீசர் இடம்பெற்றிருக்கிறது. 

மார்ச் 14-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி 5 என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 4 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக ரெட்மி 5 வெளியாக இருக்கிறது.



அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் ரெட்மி 5 ஸ்மார்ட்போன் 18:9 ரக டிஸ்ப்ளே கொண்ட குறைந்த விலை ஸ்மார்ட்போனாக இருக்கும். சியோமி இதுபோன்ற ஸ்மார்ட்போன்களை ரூ.6999-க்கும் குறைவாக நிர்ணயம் செய்து வரும் நிலையில், ரெட்மி 5 விலை இவ்வாறு நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகிறது. 



சியோமி ரெட்மி 5 சிறப்பம்சங்கள்:

- 5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
- அட்ரினோ 506 GPU
- 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
- 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் சார்ந்த MIUI 9
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- கைரேகை, இன்ஃப்ராரெட் சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி

பிளாக், லைட் புளூ, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் ரெட்மி 5 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999 முதல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News