தொழில்நுட்பம்

ஆப்பிள் மற்றும் பிராட்காம் இணைந்து உருவாக்கும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி

Published On 2017-02-20 00:27 GMT   |   Update On 2017-02-20 00:27 GMT
புதிய ஐபோன்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஆப்பிள் மற்றும் பிராட்காம் நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:

இந்த ஆண்டின் ஆப்பிள் ஐபோன்கள் செப்டம்பர் மாதம் வெளியாக இருந்தாலும், இந்த ஐபோன் குறித்த தகவல்கள் சமீப காலங்களில் இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்த ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோனில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அம்சங்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி முதன்மையானதாக இருக்கிறது.  

அந்த வகையில் புதிய ஐபோனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுவதை உறுதி செய்யும் மற்றொரு தகவல் இணையங்களில் வெளியாகி வருகிறது. பிரபல ஐபோன் வல்லுநரான ஜெ.பி மார்கன் தெரிவித்துள்ள தகவல்களில் ஆப்பிள் மற்றும் பிராட்காம் நிறுவனங்கள் இணைந்து வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் மற்றும் பிராட்காம் நிறுவனங்கள் இணைந்து வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்க கடந்த இரு ஆண்டுகளாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதோடு இந்த ஆண்டு வெளியாகும் ஐபோனில் நிச்சயம் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன் புதிய ஐபோனில் OLEDஸ டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Similar News