தொழில்நுட்பம்

ஐபோன்களை பாதிக்கும் புதிய மால்வேர்

Published On 2017-01-19 13:39 GMT   |   Update On 2017-01-19 13:56 GMT
ஐபோன்களில் பரப்பப்படும் புதிய குறுந்தகவல், ஐபோனினை இயங்க விடாமல் செய்கிறது.
சான்பிரான்சிஸ்கோ:

ஆப்பிள் ஐபோன்களில் மீண்டும் ஒரு பிரச்சனை அனைவரையும் பாதித்து வருகிறது. இம்முறை குறுந்தகவல் வடிவில் இருக்கும் இப்பிரச்சனை ஐபோனினை ஹேங் செய்து விடுகிறது. இதில் குறிப்பிடத்தக்கதாக குறுந்தகவல் ஐபோனிற்கு வந்தாலே ஹேங் ஆகி விடும்.  

எமோஜி மெசேஞ்ச் என அழைக்கப்படும் இந்த குறுந்தகவலில் இரண்டு எமோஜிக்கள் இருக்கின்றன. இவை ஐபோனில் வந்ததுமே ஐபோன் இயங்காமல் அப்படியே நின்று விடுகிறது. இந்த கோளாறினை யூட்யூப் சேனல் ஒன்று முதலில் கண்டறிந்துள்ளது.   

வெள்ளை கொடி கொண்ட எமோஜி, பூஜ்ஜியம் (0) மற்றும் வானவில் எமோஜி மற்றும் VS16 என்ற எழுத்துரு இடம்பெற்றுள்ளது. இந்த எழுத்துருக்கள் ஐபோனினை சில நிமிடங்களுக்கு பயன்படுத்தாத ஒன்றாக மாற்றிவிடுகிறது. தொடுதிரை மற்றும் பட்டன் என எதுவும் வேலை செய்யவில்லை. 

இந்த குறுந்தகவல் பெறும் ஐபோன்கள் சுமார் ஐந்து நிமிடங்களுக்கு இயங்காமல் பின் முழுமையாக ஸ்விடிச் ஆஃப் செய்துவிடுகிறது. இதோடு எவ்வித கோளாறும் இல்லாமல் ஐபோன் மீண்டும் ரீஸ்டார்ட் ஆகிவிடுகிறது. இந்த குறுந்தகவல் ஐஓஎஸ் 10 மற்றும் 10.1.1 இயங்குதள பதிப்புகளை கொண்டிருக்கும் ஐபோன்களில் ஏற்படுகிறது.

Similar News