தொழில்நுட்பம்

அசுஸ் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன்: புதிய தகவல்கள்

Published On 2017-01-01 13:04 GMT   |   Update On 2017-01-01 13:04 GMT
அசுஸ் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை ரகசியமாக தயாரித்து வருவதாகவும், இந்த போனின் சிறப்பம்சங்களும் இணையத்தில் கசிந்துள்ளன.
தைபே:

தைவானைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான அசுஸ், புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை ரகசியமாக தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் படி அசுஸ் தயாரித்து வரும் புதிய ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த பேட்டரி கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. 

சீனாவின் சான்றிதழ் வழங்கும் தளமான Tenaa-வில் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பு சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.    

அதன் படி புதிய ஸ்மார்ட்போன் "X00GD" என்ற பெயரில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம், 4850 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. முன்னதாக அசுஸ் வெளியிட்ட சென்ஃபோன் 3 மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டிருந்தது. 

மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.2 இன்ச் 720x1280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எச்டி டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர், 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. அசுஸ் X00GD மூன்று வித மாடல்களில் வெளியிடப்பட உள்ளது.
 
மேலும் 2GB, 3GB, அல்லது 4GB ரேம், உடன் 16GB, 32GB, அல்லது 64GB இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. அசுஸ் சென்ஃபோன் 4 வெளியிடுவது குறித்து அந்நிறுவனம் எவ்வித தகவலையும் வழங்கவில்லை என்றாலும் தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்கள் அசுஸ் நிறுவனத்தின் சென்ஃபோன் 4 விரைவில் வெளியாகலாம் என்பதையே உணர்த்துவதாக அமைந்துள்ளது.   

மேலும் இந்த வாரம் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற இருக்கும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் (CES 2017) இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News