தொழில்நுட்பம்

ஆண்ட்ராய்டு நௌக்கட் அப்டேட் பெறும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்: முழு தகவல்கள்

Published On 2017-01-01 11:11 GMT   |   Update On 2017-01-01 11:11 GMT
உலகம் முழுக்க பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கும் ஆண்ட்ராய்டு நௌக்கட் அப்டேட் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனிற்கும் புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.
சென்சென்:

ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 3 மற்றும் ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் வெளியிட்டது. இத்துடன் 2016 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நௌக்கட் அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட்டு வருவதை போல் இவற்றிற்கும் ஆணட்ராய்டு நௌக்கட் 7.1.1 அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.   

ஒன்பிளஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கார்ல் பெய், தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம், ஒன்பிளஸ் வாக்குறுதியை சாத்தியமாக்க இரவு பகலாக உழைத்த அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். ஒன்பிளஸ் சமீபத்தில் ஆக்சிஜன் ஒஎஸ் 3.5.5 அபேட்டினை ஒன்பிளஸ் 2 வழங்கியது. இதை கொண்டு வோல்ட்இ தொழில்நுட்பம் வேலை செய்யும். 

ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் அப்டேட் மூலம் மல்டி-விண்டோ, குவிக் ஸ்விட்ச், விர்ச்சுவல் ரியாலிட்டி அம்சம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் புதிய வகை மோஜி, மேம்படுத்தப்பட்ட ஃபைல் பிரவுஸர், ஸ்வைப் டூ ஷ்ரின்க் என பல்வேறு அம்சங்களும் கிடைக்கின்றன.   

கூடுதல் அம்சங்களை பொருத்த வரை புஷ் நோட்டிபிகேஷன், கூகுள் அசிஸ்டண்ட் மேம்படுத்தப்பட்ட ஜாவா 8 மொழிகளை சப்போர்ட் செய்யும், நோட்டிபிகேஷன்களுக்கு நேரடியாக பதில் அளிக்கும் வசதி, பேட்டரி பேக்கப் அம்சங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.  

புதிய அப்டேட் பெற்றதும் பயனர்கள், வைபை இணைப்புடன் அப்டேட் செய்ய துவங்கலாம் என்றும், ஸ்மார்ட்போனின் சார்ஜ் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோட்டிபிகேஷன் பெற்றவர்கள் “Yes, I’m in” என கிளிக் செய்து டவுன்லோடு செய்யலாம். இந்த தகவல் பெறாதவர்கள் தங்களின் ஸ்மார்ட்போன் Settings > About Phone > System updates சென்று புதிய அப்டேட்டினை டவுன்லோடு செய்யலாம்.

Similar News