செய்திகள்
திருவக்கரை வக்ரகாளியம்மன் பவுர்ணமி தீபம்

ஆடி மாத பவுர்ணமி- திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் மகாதீபம்

Published On 2019-08-15 08:10 GMT   |   Update On 2019-08-15 08:10 GMT
திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் ஆடிமாத பவுர்ணமியை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரையில் வக்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு மாதந்தோறும் பவுணர்மி தினத்தன்று மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.

அதன்படி ஆடி மாத பவுணர்மியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் வக்ர காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் வக்ரகாளியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதை தொடர்ந்து கோவில் மேல் பிரகாரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.

அப்போது கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோ‌ஷத்துடன் மகா தீபத்தை தரிசனம் செய்து வழிபட்டனர்.

பக்தர்களின் வசதிக்காக திண்டிவனம், விழுப்புரம், புதுவை மற்றும் தென் தமிழகம், சென்னை, கர்நாடகா, ஆந்திரா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

விழாவிற்கான ஏற்பாடு களை இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் நாகராஜன், ஆய்வாளர் சரவணன், சிவாச்சாரியார் சேகர் குருக்கள், மேலாளர் ரவி ஆகியோர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News