செய்திகள்

மார்கழி மாத அமாவாசை சிறப்பு பூஜை: மாசாணியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Published On 2016-12-30 10:04 GMT   |   Update On 2016-12-30 10:04 GMT
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்ற மார்கழி மாத அமாவாசை சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வேண்டுதல் ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் இந்த கோவிலில் சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அமாவாசை சிறப்பு பூஜை சக்தி வாய்ந்தது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

மார்கழி மாத அமாவாசை சிறப்பு பூஜையை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை முதல் ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர். இதனையடுத்து கோவில் நடை சாத்தாமல் விடிய விடிய திறந்து வைத்திருக்க கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

நேற்று அதிகாலையில் ஆனைமலை ஆழியாறு மற்றும் உப்பாற்றில் நீராடியபின் பக்தர்கள் முதல் கால பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்,

கோவில் வளாகத்தில் நடைபெற்ற அன்னதானத்திலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் கார்த்திக். கண்காணிப்பாளர் தமிழ்வாணன். புலவர் லோகநாதீஸ்வரன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Similar News