உலகம்

அடுத்தடுத்து மூன்று முறை.. தொடர் நிலநடுக்கத்தால் திணறிய நேபாளம் - 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

Published On 2023-10-03 12:07 GMT   |   Update On 2023-10-03 12:07 GMT
  • மூன்றாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.1 ஆக பதிவாகி இருக்கிறது.
  • நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.

நேபாளத்தின் மேற்கு பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. இவை ரிக்டர் அளவுகோலில் 5.3 மற்றும் 6.3 என்று பதிவாகி உள்ளன. இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மூன்றாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.1 ஆக பதிவாகி இருக்கிறது.

நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஐந்து பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நிலநடுக்கத்தால், கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன.

இந்த நிலநடுக்கம் காரணமாக அருகாமையில் உள்ள இந்தியாவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. தொடர்ச்சியான நிலநடுக்கம் குறித்து பேசிய உத்தரகண்ட் மாநிலத்தின் ஹெச்.என்.பி. மத்திய பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் மகாவீர் நெகி, "இந்த சிறிய நிலநடுக்கங்கள் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட இருப்பதை உணர்த்துகின்றன," என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் பேசிய அவர், "பெரிய நிலநடுக்கத்திற்கு பிறகு, பூமியில் உள்ள ஆற்றல் மட்டுமே வெளியேற்றப்படும். இது குறித்து நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். இதோடு நிலநடுக்கத்தை தாங்கும் வகையிலான கட்டிடங்களை கட்டமைக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News