உலகம்

கனடாவில் காந்தி சிலை சேதம்- இந்தியா கடும் கண்டனம்

Published On 2022-07-14 06:29 GMT   |   Update On 2022-07-14 06:31 GMT
  • காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
  • ரிக்மண்ட் ஹில் விஷ்ணு கோவிலில் உள்ள மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்.

ஒட்டாவா:

கனடா ஆண்டோரியோவில் ரிச்மண்ட் ஹில் யாங்கே தெருவில் பிரசித்தி பெற்ற விஷ்ணு கோவில் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை அமைந்துள்ளது.

நேற்று இரவு இந்த காந்தி சிலையை யாரோ சேதப்படுத்தினர். மேலும் கரி பூசி அவமதிப்பும் செய்தனர். இந்த செயலில் ஈடுபட்டது யார் என்று தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து கனடா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக கனடாவில் உள்ள இந்திய துணைத்தூ தரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

ரிக்மண்ட் ஹில் விஷ்ணு கோவிலில் உள்ள மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். இது வெறுக்கத்கக்க, காழ்ப்புணர்ச்சி ஆகும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கனடா போலீசாருக்கு தெரிவித்து உள்ளோம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News