உலகம்
போப் ஆண்டவர்

போப் ஆண்டவர் பிரான்சிஸ் மூட்டு வலியால் அவதி

Update: 2022-05-18 09:01 GMT
அடுத்த மாதம் லெபனான் நாட்டுக்கு 2 நாட்கள் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ரோம்:

போப் ஆண்டவர் பிரான்சிஸ் சில நாட்களாக வலது முழங்கால் வலியால் அவதி அடைந்து வருகிறார்.

வலி நிவாரணத்துக்காக ஊசி மூலம் மருந்து செலுத்தி கொள்வதாக போப் ஆண்டவர் தெரிவித்தார்.

இதற்கிடையே 85 வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ் மூட்டு வலியால் நடப்பதற்கு சிரமப்பட்டதால் அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்துமாறு டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்படி போப் ஆண்டவர் சக்கர நாற்காலியில் வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

போப் ஆண்டவரின் முழங்கால் வலிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்காக அவருக்கு பல பரிந்துரைகளை வழங்கி உள்ளனர்.

போப் ஆண்டவர் பிரான்சிஸ் தினமும் 2 மணி நேரம் சிகிச்சை எடுத்து கொள்கிறார். அவர் முன்பைவிட சிறப்பாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் லெபனான் நாட்டுக்கு 2 நாட்கள் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
Tags:    

Similar News