உலகம்
பிரதமர் ரனில் விக்ரமசிங்கே

ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது - ரனில் விக்ரமசிங்கே பேச்சு

Published On 2022-05-16 13:31 GMT   |   Update On 2022-05-16 13:31 GMT
நாட்டு மக்களிடம் உரையாற்றி இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, நமது நாட்டின் பொருளாதார நிலையை சீர்செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது என தெரிவித்தார்.
கொழும்பு:

இலங்கையின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் ரனில் விக்ரமசிங்கே  இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

என்னிடம் கைப்பிடி இல்லை,  என் கால்களில் கழற்ற முடியாத காலணிகளை அணிந்துள்ளேன்.

நான் பொறுப்பேற்றது கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவால். மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது

நமது கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது.

இந்திய கடன் உதவியின் கீழ் மே 19, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 2 டீசல் கப்பல்களும், மே 18, மே 29 ஆகிய தேதிகளில் 2 பெட்ரோல் கப்பல்களும் வரவுள்ளன.

இலங்கையின் பொருளாதார நிலையை சீர்செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது என தெரிவித்தார்.
Tags:    

Similar News