உலகம்
பிரதமர் மகிந்த ராஜபக்சே

லைவ் அப்டேட்ஸ் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ராஜினாமா ஏற்பு

Published On 2022-05-09 18:45 GMT   |   Update On 2022-05-09 23:16 GMT
இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியால் அதிபர், பிரதமர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதன் எதிரொலியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
10.5.2022

04.30: இலங்கையில் சமையல் கியாஸ் கையிருப்பு தீர்ந்து விட்டதால் நாடு முழுவதும் சமையல் கியாஸ் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

புதிய கையிருப்பு வரும் வரை கியாஸ் வினியோகம் செய்ய முடியாது என இலங்கையின் முன்னணி கியாஸ் நிறுவனமான லிட்ரோ கியாஸ் லங்கா லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

00.10: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ராஜினாமாவை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏற்றுக் கொண்டதாக அந்நாட்டு அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

இலங்கையில் மறு உத்தரவு வரும் அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்படுவதாக இலங்கை ரெயில்வே அறிவித்துள்ளது. இன்று இயக்கப்பட்டு வரும் ரெயில்கள் அந்தந்த இடங்கள் வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் குருங்கலாவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின்மீது போராட்டக்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தி தீ வைத்தனர். இதுபோல் ஆளுங்கட்சியினரின் வீடுகளுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி இருதரப்பும் கடுமையாக தாக்கிக் கொண்டது. இதையடுத்து, அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க கொழும்புவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
Tags:    

Similar News