உலகம்
மனைவியை தோளில் சுமந்து கணவர்கள் ஓடும் போட்டி

ஹங்கேரியில் மனைவியை தோளில் சுமந்து கணவர்கள் ஓடும் போட்டி- வெற்றி பெற்ற தம்பதிக்கு எடைக்கு எடை ‘பீர்’

Published On 2022-05-08 05:05 GMT   |   Update On 2022-05-08 05:05 GMT
கணவன் மார்கள் தங்கள் மனைவியை தோளின் பின்புறம் சுமந்தப்படி ஓடினார்கள். சேறு, மணல்மேடு, குட்டை, ஆகியவற்றை கடந்து ஓடினர்.

புடாபெஸ்ட்:

ஹங்கேரி நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மனைவியை கணவன் மார்கள் தோளில் சுமந்து செல்லும் ஓட்டப்பந்தயம் நடத்தப்படுகிறது.

மொத்த பந்தய தூரம் 260 மீட்டராக நிர்ணயிக்கப்பட்டது. இதில் சேறு, குட்டை, மண்ல்மேடு, டயர்கள் ஆகியவற்றை கொண்டு தடைகள் அமைக்கப்பட்டன. இந்த தடைகளை மனைவியை தோளில் சுமந்தபடி கணவர்கள் தாண்டிச் செல்ல வேண்டும்.

இப்போட்டியில் ஏராளமான தம்பதிகள் கலந்து கொண்டனர். கணவன் மார்கள் தங்கள் மனைவியை தோளின் பின்புறம் சுமந்தப்படி ஓடினார்கள். சேறு, மணல்மேடு, குட்டை, ஆகியவற்றை கடந்து ஓடினர். இதில் ஒரு சிலர் கீழே விழுந்தனர். போட்டியில் பங்கேற்றவர்களை கை தட்டி உற்சாகப்படுத்தினார்கள்.

இப்போட்டியில் முதலிடம் பிடித்த தம்பதிக்கு பரிசு பொருட்களும், எடைக்கு எடை பீர் பாட்டில்களும் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News