உலகம்
பிரதமர் மோடிக்கு டென்மார்க் ராணி விருந்து

பிரதமர் மோடிக்கு டென்மார்க் ராணி விருந்து

Update: 2022-05-05 02:14 GMT
வரலாற்று சிறப்புமிக்க அமலியன்போர்க் அரண்மனைக்கு சென்ற பிரதமர் மோடி ராணி இரண்டாம் மார்கிரேத்தை சந்தித்து, அவர் பட்டத்துக்கு வந்ததன் பொன்விழாவையொட்டி, வாழ்த்து தெரிவித்தார்.
கோபன்ஹேகன் :

பிரதமர் மோடி தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் 2-வது கட்டமாக நேற்று முன்தினம் டென்மார்க் சென்றார். அந்த நாட்டின் பிரதமர் மெட்டே பிரடெரிக்சனுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பிலும் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

அதைத்தொடர்ந்து கோபன்ஹேகனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அமலியன்போர்க் அரண்மனைக்கு பிரதமர் மோடி சென்றார். ராணி இரண்டாம் மார்கிரேத்தை சந்தித்து, அவர் பட்டத்துக்கு வந்ததன் பொன்விழாவையொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ராணி விருந்து அளித்து கவுரவித்தார்.

அப்போது அவரிடம் பிரதமர் மோடி, சமீப காலமாக இந்திய டென்மார்க் உறவில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் பற்றியும், இரு தரப்பு பசுமை வியூக கூட்டாண்மை குறித்தும் எடுத்து கூறினார்.

தனக்கு விருந்து அளித்தமைக்காக பிரதமர் மோடி, அவரிடம் நன்றியும் தெரிவித்துக்கொண்டார். இதை வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி டுவிட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
Tags:    

Similar News