உலகம்
அமெரிக்கா

அமெரிக்க பணி அனுமதி ஆணை மேலும் 1.5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

Published On 2022-05-04 05:36 GMT   |   Update On 2022-05-04 07:16 GMT
இந்த நடவடிக்கை மூலம் அமெரிக்க முதலாளிகளுக்கு பணி சம்பந்தப்பட்ட இடையூறுகள் ஏற்படாமல் தவிர்க்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு காலவதியான பணி அனுமதி ஆணையை மேலும் 18 மாதங்களுக்கு நீட்டித்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க கிரீன் கார்ட் வேண்டி காத்திருப்போருக்கும், ஹெச்.1பி வீசா வைத்திருப்பவர்களின் மனைவிகள் உள்ளிட்டோருக்கு இந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே காலாவதியான பணி அனுமதி ஆணை தானியங்கியாக 180 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் நிலையில், தற்போது 540 நாட்களுக்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக விதி குடிமக்கள் அல்லாதவர்களுக்கும், தானியங்கி நீட்டிப்புக்கு தகுதியுடையவர்களுக்கும் வேலைவாய்ப்பை பராமரிக்கவும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவை வழங்க வழி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த நடவடிக்கை மூலம் அமெரிக்க முதலாளிகளுக்கு பணி சம்பந்தப்பட்ட இடையூறுகள் ஏற்படாமல் தவிர்க்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News