உலகம்
கோப்புப்படம்

உக்ரைன் கொடுத்த பதிலடியில் ரஷியாவுக்கு ஏற்பட்ட சேதம் எவ்வளவு?

Published On 2022-03-03 10:47 GMT   |   Update On 2022-03-03 11:44 GMT
ரஷியாவுக்கு எதிராக 8-வது நாளாக போரில் தாக்குப்பிடித்து வரும் உக்ரைன் ராணுவம், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷிய வீரர்களை வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா கடந்த வியாழக்கிழமை தாக்குதலை தொடங்கியது, இன்று 8-வது நாளாக சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் எளிதாக வீழ்ந்துவிடும் என ரஷியா நினைத்தது. ஆனால், கடைசி வரை போராடுவோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்த நிலையில் உக்ரைன் ராணுவம் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது.

மேற்கு நாடுகள் ஆயுத உதவிகள் வழங்கி வருவதால் உக்ரைன் எதிர் தாக்குதலை அதிகரித்துள்ளது. ஊருக்குள் புகுந்த ரஷிய துருப்புகளை உக்ரைன் ராணுவம் வீழ்த்தி வருகிறது. இதனால் ரஷியாவுக்கு இழப்பு அதிகமாக இருந்து வருகிறது.



இதனால் வீரர்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என ரஷியா இழப்புகளை சந்தித்துள்ளது. இந்த நிலையில் இதுவரை எதிர் தாக்குதலில் 9 ஆயிரம் வீரர்களை வீழ்த்தியுள்ளோம் என உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 30 விமானங்கள், 31 ஹெலிகாப்டர்கள், 217 பீரங்கிகள், 374 ராணுவ வாகனங்களை அழித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News