search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ரஷிய வெளியுறவுத் துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ்
    X
    ரஷிய வெளியுறவுத் துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ்

    3ம் உலகப் போர் ஏற்பட்டால் அணு ஆயுதங்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்- ரஷியா எச்சரிக்கை

    விளையாட்டு வீரர்கள் மீதான தடையை எதிர்பார்க்கவில்லை என ரஷிய வெளியுறவுத் துறை மந்திரி கூறினார்.
    மாஸ்கோ:

    ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 7வது நாளாக நீடிக்கிறது. உக்ரைனை சுற்றி வளைத்து ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்துவதால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டைப் பாதுகாக்க உக்ரைன் படையினர் கடுமையாக போராடிவருகின்றனர். உக்ரைனுக்குள் நுழையும் ரஷிய வீரர்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்துகின்றனர். உக்ரைனுக்குள் நுழைந்த ரஷிய வீரர்களில் இதுவரை 6000 வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. உக்ரைனுக்கு நட்பு நாடுகள் ஆயுத உதவிகள் வழங்கி வருவதால் போர் தீவிரமடைந்துள்ளது. 

    இந்நிலையில், போர் நிலவரம் குறித்து ரஷிய வெளியுறவுத் துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் கூறியதாவது:-

    உக்ரைனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, பொருளாதார தடைகளை எதிர்கொள்ள ரஷியா தயாராக இருந்தது. ஆனால், விளையாட்டு வீரர்கள் மீதான தடையை எதிர்பார்க்கவில்லை.

    உக்ரைன் நாடு அணு ஆயுதங்களை வாங்க ரஷியா அனுமதிக்காது. மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும். மூன்றாம் உலகப்போரில் அணு ஆயுதங்களே அதிக பாதிப்பை  ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். உக்ரைன் அணு ஆயுதங்களை வாங்கினால் ரஷியா உண்மையான ஆபத்தை சந்திக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×