உலகம்
நாகேந்திரன் தர்மலிங்கம்

இந்தியரின் மரணதண்டனை ரத்தாகுமா? -சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தில் 24-ம் தேதி விசாரணை

Published On 2022-01-15 15:09 GMT   |   Update On 2022-01-15 15:09 GMT
போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கிய இந்திய வம்சாவளியான நாகேந்திரனுக்கு கடந்த நவம்பர் 10 அன்று நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டது.
சிங்கப்பூர்:

மலேசியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம் கடந்த 2009-ல் சிங்கப்பூருக்கு ஹெராயின் போதை மருந்து கடத்தி வந்ததற்காக கைது செய்யப்பட்டார். அவருக்கு 2010-ல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இதைத்தொடர்ந்து, நாகேந்திரன் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரிய மேல்முறையீடுகளும், ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டன.

நாகேந்திரன் மரண தண்டனையை கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி நிறைவேற்ற வேண்டும் என சிங்கப்பூர் அரசு தெரிவித்தது.
ஆனால், நாகேந்திரன் கொரோனாவால் பாதிப்பு அடைந்ததால் அவரது மரண தண்டனையை அந்நாட்டு உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

இதற்கிடையே, மரண தண்டனையை எதிர்த்து நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளை தொடங்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், நாகேந்திரன் தர்மலிங்கம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் ஜனவரி 24-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

இந்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் மற்றும் நீதிபதிகள் ஆண்ட்ரூ பாங், ஜூடித் பிரகாஷ், பெலிண்டா ஆங் மற்றும் சாவ் ஹிக் டின் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்க உள்ளது என அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

Similar News