செய்திகள்
ரஷியாவில் நிலக்கரி சுரங்க தீ விபத்தில் 52 பேர் பலி

ரஷியாவில் நிலக்கரி சுரங்க தீ விபத்தில் 52 பேர் பலி

Published On 2021-11-26 08:24 GMT   |   Update On 2021-11-26 08:24 GMT
ரஷ்யாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாஸ்கோ:

ரஷியாவின் சைபீரியா பகுதியில் லிஸ்ட்வேஸ்னியா என்ற இடத்தில் நிலக்கரி சுரங்கம் உள்ளது.

தலைநகரம் மாஸ்கோவில் இருந்து 3,500 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

நேற்று இந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். சுரங்கத்தின் காற்றோட்டத்துக்காக ஏராளமான குழிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இதில் ஒரு குழியின் முகப்பு பகுதியில் படிந்திருந்த நிலக்கரி தூணில் திடீரென தீப்பிடித்து சுரங்கத்துக்குள் பரவியது.

தீயில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். 52 தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகா யம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். தற்போது 49 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

விபத்து தொடர்பாக சுரங்க நிறுவன அதிகாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஷியாவில் 58 சுரங்கங்கள் உள்ளன. அதில் 34 சதவீத சுரங்கங்கள் பாதுகாப்பாற்றவை என்று அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதில் ஒரு சுரங்கத்தில்தான் விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News