செய்திகள்
பாகிஸ்தான் டி.வி.யில் இந்திய வாழைப்பழம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்திய வாழைப்பழம் பற்றி பாகிஸ்தான் டி.வி.யில் காமெடி விவாதம்

Published On 2021-11-05 07:39 GMT   |   Update On 2021-11-05 07:39 GMT
இந்தியாவின் மும்பையில் கிடைக்கும் வாழைப்பழங்கள் பெரியதாக இருப்பதாக பாகிஸ்தான் டி.வி.யில் விவாதிக்கப்பட்டது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் இருந்து ஒளிபரப்பாகும் தனியார் டி.வி.யில்  ஒரு நிகழ்ச்சியை, அல்வீனா ஆகா என்ற பெண் தொகுப்பாளர் தொகுத்து வழங்கினார். பாகிஸ்தான் உள்கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பான அந்த நிகழ்ச்சியில், கவாஜா நவீத் அகமது என்ற பொருளாதார நிபுணர் பங்கேற்றார்.

‘ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்’ என, அவர் வாதிட்டார். இதற்கு உதாரணமாக வாழைப்பழத்தை அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் விளையும் வாழைப்பழங்கள், விரல் அளவுக்கே உள்ளன.  அதே நேரத்தில், இந்தியாவின் மும்பையில் கிடைக்கும் வாழைப்பழங்கள் பெரியதாக இருக்கின்றன’ என அவர் குறிப்பிட்டார்.  அதைக் கேட்டதும், தொகுப்பாளர் ஆகா சிரித்தார். இந்தியாவில் வாழைப்பழங்கள் எப்படி பெரிதாக வளர்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். வங்கதேசத்தின் டாக்காவிலும் வாழைப்பழங்கள் பெரிதாக இருக்கின்றன. அதை இறக்குமதி செய்ய வேண்டும் என, கவாஜா நவீத் அகமது குறிப்பிட்டார்.

அப்போதும் தொகுப்பாளர்  அல்வீனா ஆகா, விழுந்து விழுந்து சிரித்தார். இது தொடர்பான  ‘வீடியோ’ தற்போது சமூக வலை தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
Tags:    

Similar News