செய்திகள்
இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

உலகளாவிய சவால்களை தீர்க்க அமெரிக்க- இந்தியா உறவு எங்களுக்கு உதவும் என நம்புகிறேன்: ஜோ பைடன்

Published On 2021-09-24 16:50 GMT   |   Update On 2021-09-24 16:50 GMT
வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்- இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் சந்திப்பு நடைபெற்றது.
அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி இந்திய நேரப்படி இன்றிரவு வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தார். அப்போது அவர்கள் பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

சந்திப்பின்போது ஜோ பைடன் ‘‘உலகளாவிய சவால்களை தீர்க்க அமெரிக்க- இந்தியா உறவு எங்களுக்கு உதவும் என்று நான் நீண்ட காலமாக நம்புகிறேன். உண்மையிலேயே 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவும் அமெரிக்காவும் உலகின் மிக நெருக்கமான நாடுகளில் ஒன்றாக இருக்கும் என 2006-ல் நான் கூறியிருந்தேன்’’ என்றார்.
Tags:    

Similar News