செய்திகள்
பிரதமர் மோடி, துணை அதிபர் கமலா ஹாரிஸ்

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Published On 2021-09-23 19:33 GMT   |   Update On 2021-09-23 19:33 GMT
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின், பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்கிறார். இது அவர்களிடையே நடக்கும் முதல் சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன்:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி அண்டை நாடான வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் சென்று வந்தார்.
 
இதற்கிடையே, 6 மாதத்திற்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடு சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். நேற்று 4 நாள் பயணமாக அவர் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

அமெரிக்காவில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை (சி.இ.ஓ.) இன்று சந்தித்துப் பேசினார். தனித்தனியாக இந்த சந்திப்பு நடந்தது.

இந்நிலையில், அமெரிக்க துணை அதிபரும், தமிழக வம்சாவளியைக் கொண்டவருமான கமலா ஹாரிசை, பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி இந்தியா என பாராட்டி பேசினார். 

இந்தியா- அமெரிக்கா நட்புறவை தொடர்வது, கொரோனாவை எதிர்த்து போராடும் பணிகளை ஒருங்கிணைந்து செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.

Tags:    

Similar News