செய்திகள்
கொரோனா வைரஸ்

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.85 கோடியைக் கடந்தது

Published On 2021-06-19 00:51 GMT   |   Update On 2021-06-19 00:51 GMT
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38.66 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
ஜெனீவா:

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா-வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. 

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. 

இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.85 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா-வைரஸ் பாதிப்பில் இருந்து 16.31 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.66 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா-வைரஸ் பரவியவர்களில் 1.16 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 82 ஆயிரத்து 200-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 
Tags:    

Similar News