செய்திகள்
விமான சேவை

கொரோனா பரவல் எதிரொலி - இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் பாகிஸ்தான் உள்பட 4 நாடுகள்

Published On 2021-04-02 21:02 GMT   |   Update On 2021-04-03 00:25 GMT
உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இங்கிலாந்து 6-வது இடத்தில் நீடிக்கிறது.
லண்டன்:

இங்கிலாந்து நாட்டில் இதுவரை 43 லட்சத்து 53 ஆயிரத்து 547 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  அவர்களில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 6 பேர் உயிரிழந்து உள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட 30 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு இங்கிலாந்தில் நுழைய தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான், கென்யா, பிலிப்பைன்ஸ் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளை இங்கிலாந்து சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இதன்படி, இந்த நாடுகளில் இருந்து இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாட்டு மக்களை தவிர்த்து பிறர் வருவதற்கு தடை விதிக்கப்படும்.

இந்த பயண தடையானது, வரும் ஏப்ரல் 9-ம் தேதி காலை 4 மணியில் இருந்து அமலுக்கு வரும் என அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.

இதற்கு பின்னர் அந்த நாடுகளில் இருந்து வரும் இங்கிலாந்து மக்கள் 10 நாட்கள் கட்டாயம் ஓட்டல்களில் தங்கியிருக்க வேண்டும் என உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News