ஈரானில் இன்று 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கியதால் 40 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஈரானில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்- 40 பேர் காயம்
பதிவு: பிப்ரவரி 18, 2021 18:53
நிலநடுக்கம்
தெக்ரான்:
மக்கள் தொகை பெருக்கம் அதிகம் உள்ள இந்த காலகட்டத்தில் இயற்கை சீற்றங்களும் அதிக அளவில் அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. சுனாமி சூறாவளி காற்று போன்ற மற்ற இயற்கை சீற்றங்களை விட நிலநடுக்கம் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக ஏற்படும் கொண்டே இருக்கிறது.
ஈரானில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈரானின் மேற்கு கோகிலுயே வா பாயெரஹ்மத் மாகாணத்தில் உள்ள சிசாக் நகரத்தில் இன்று காலை 10.02 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 5.6ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் குலுங்கியது.10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தால் 40 பேர் காயமடைந்தனர்.
Related Tags :