search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரான் நிலநடுக்கம்"

    ஈராக் மற்றும் ஈரான் நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் முறையே 4.3 மற்றும் 4.1 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. #quakejoltsnortheastern #Iranquake #Iraqquake #northeasternIran #northeasternquake
    பாக்தாத்:

    ஈரான் நாட்டில் வடகிழக்கில் உள்ள கோராசான் மாகாணத்தில் (உள்ளூர் நேரப்படி) நேற்று நள்ளிரவு நடுக்கம் ஏற்பட்டது, ஷவ்கான் நகரில் அதிகமாக உணரப்பட்ட இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4.1 அலகுகளாக பதிவாகி இருந்தது.

    இதேபோல், அருகாமையில் உள்ள ஈராக் நாட்டின் வடகிழக்கில் உள்ள சுலைமானியா மற்றும் டியாலா மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ரிக்டர் அளவுக்கோலில் 4.3 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம் கலார், கர்மியான், கிர்ஃபி மற்றும் கனாக்கின் மாவட்டங்களில் அதிகமாக உணரப்பட்டதாக ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இவ்விரு நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #quakejoltsnortheastern #Iranquake #Iraqquake #northeasternIran #northeasternquake
    ஈரானில் நேற்று ஜர்மான்ஷா மாகாணத்தில் 5.9 ரிக்டரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 75-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மற்ற சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. #Iranearthquake
    தெக்ரான்:

    ஈரானில் நேற்று ஜர்மான்ஷா மாகாணத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஜிலாங்கர்ப் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன.

    அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மலைப் பகுதியில் இருந்து உருண்டு வந்த பாறைகள் ரோடுகளில் தடை ஏற்படுத்தின. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. குடிக்க தண்ணீர் இன்றி மக்கள் தவிக்கின்றனர்.

    5.9 ரிக்டரில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. நில நடுக்கத்தக்கு பிறகு தொடர்ந்து 15 தடவை பூமி அதிர்ந்தது. அவை 3 முதல் 4.8 ரிக்டர் ஆக பதிவானது.

    நில நடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள், கால்நடை பண்ணைகள் இடிந்து சேதம் அடைந்தன. அதில் 75-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மற்ற சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.  #IranEarthquake
    ஈரான்-ஈராக் எல்லையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 750 பேர் காயமடைந்தனர். #IranEarthquake
    டெஹ்ரான்:

    ஈரானின் தெற்கு பகுதியில் எகிப்து நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள கெர்மன்ஷா மாகாணத்தின் சர்போல்-இ-சகாப் நகரில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 163 கி.மீ. தொலைவிலும், ஈரானின் சர்போல்-இ-சகாப் நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

    இந்த நிலநடுக்கமானது கெர்மன்ஷா மாகாணத்தில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை கடுமையாக உலுக்கியது. வீடுகள், வணிகவளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பலமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்த வெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர்.



    பல இடங்களில் வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தால் 716 பேர் காயம் அடைந்ததாக ஈரான் அரசு தகவல் வெளியிட்டது.

    மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போலீசார், ராணுவத்தினர் மற்றும் மீட்புகுழுவினர் குவிக்கப்பட்டு தீவிர மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதே போல் இந்த நிலநடுக்கம் ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள கலார் நகரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அங்கு வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. அங்கு இந்த நிலநடுக்கத்துக்கு ஒருவர் பலியானார். மேலும் 43 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
    ஈரானின் மேற்கு பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 170 பேர் காயமடைந்தனர். #IranEarthquake
    தெஹ்ரான்:

    ஈரானின் மேற்கு பகுதியில், ஈராக் எல்லையை ஒட்டியுள்ள கெர்மன்ஷா மாகாணம், சர்போல் இ ஸகாப் அருகே நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, கட்டிடங்கள் சேதம் அடைந்தன. மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால்  பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர்.


    இந்த விபத்தில் 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் பலருக்கு லேசான காயங்களே ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் மட்டுமே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    நிலநடுக்கம் தாக்கிய இடங்களில் 6 மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #IranEarthquake
    ஈரானின் தென்கிழக்கு பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி 18 வயது பெண் ஒருவர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Iranearthquake
    துபாய் :

    ஈரானின் தென்கிழக்கு பகுதியில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல கிராமங்களில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன.

    நிலநடுக்கத்தில் 2 பேர் பலியானதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் இடிபாடுகளில் சிக்கி 18 வயது பெண் ஒருவர் மட்டுமே பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரானில் அடிக்கடி இதுபோன்று நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பயங்கர நிலநடுக்கத்தில் 620-க்கும் மேற்பட்டோர் பலியானது நினைவுகூரத்தக்கது. 
    ஈரான் நாட்டின் கெர்மானஷனா நகரில் இன்று 5.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பரிதாபமாக பலியானார். 58 பேர் காயம் அடைந்தனர். #IranEarthquake
    தெக்ரான்:

    ஈரானில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் அங்குள்ள கெர்மன்‌ஷனா நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் அதிர்ந்து குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

    கெர்மான்ஷா மற்றும் தசேகாபாத் உள்ளிட்ட இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியானார். 58 பேர் காயம் அடைந்தனர்.

    5.9 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கெர்மான் ஷாவில் இருந்து வடகிழக்கில் 88 கி.மீ. தொலைவில் பூமிக்கு அடியில் நிலநடுக்கம் உருவாகியுள்ளது.

    முன்னதாக 2 தடவை நில அதிர்வு உணரப்பட்டது. அவை 3 ரிக்டர் ஆக பதிவாகி இருந்தது. தற்போது இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

    இந்த நிலநடுக்கம் அண்டை நாடான ஈராக் தலைநகர் பாக்தாத்திலும் உணரப்பட்டது. ஆனால் அங்கு யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கெர்மான்ஷா மாகாணம் ஈராக் எல்லையில் மலைகள் சூழ்ந்த பகுதி. கடந்த ஆண்டு நவம்பரில் இங்கு 7.3 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது கெர்மான்ஷா நகரமும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. 530 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர். #IranEarthquake
    ×