செய்திகள்
கோப்புப்படம்

இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது

Published On 2021-01-26 20:02 GMT   |   Update On 2021-01-26 20:02 GMT
இந்தோனேசியாவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.
ஜகார்த்தா:

கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்று. அங்கு கொரோனா தொற்று ஜெட் வேகத்தில் பரவிவருகிறது.

இந்த நிலையில் அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.

இதுகுறித்து இந்தோனேசியாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 94 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மொத்த பாதிப்பு 10 லட்சத்து 12 ஆயிரத்து 350 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கொரோனா பலி எண்ணிக்கை 28 ஆயிரத்து 468 ஆக அதிகரித்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.

மக்கள் தொகையில் உலகின் 4-வது மிகப்பெரிய நாடான இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர்தான் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

சுகாதார ஊழியர்கள், ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பொது பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News