ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் 32 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
பாக்தாத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 32 பேர் பலி, 100-க்கும் மேற்பட்டோர் காயம்
பதிவு: ஜனவரி 21, 2021 21:14
தற்கொலைப்படை தாக்குதல்
ஈராக் தலைநகர் பாக்தாத்தின் மத்திய பகுதியில் உள்ள வணிக பகுதியான பாப் அல்-ஷர்கி என்ற இடத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 32 பேர் உயிரிழந்தனர். மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் எங்கும் பார்த்தாலும் ரத்தமும், சதையுமாக காட்சியளித்தன.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. என்றாலும், இது ஐஎஸ் பயங்கரவாதிகளின் செயலாக இருக்கலாம் என ஈராக் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளனர். 110-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் சிலர் கவலையளிக்கும் வகையில் உள்ளனர் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி ஹசன் முகமது அல்-தமிமி தெரிவித்தார்.
Related Tags :