செய்திகள்
கோப்பு படம்

சூடான்: அரசு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பயங்கரமோதல் - 83 பேர் பலி

Published On 2021-01-17 20:17 GMT   |   Update On 2021-01-17 20:17 GMT
சூடானில் அரசு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 83 பேர் உயிரிழந்தனர்.
கார்டூம்:

வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நாட்டில் 2003 ஆம் ஆண்டு முதல் டர்பர் மாகாணத்தை மையமாக கொண்டு உள்நாட்டு போர் நிலவி வந்தது.

டர்பர் மாகாணத்தின் பெரும் பகுதிகளை தங்கள் வசம் வைத்துள்ள சூடான் அரசுக்க்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்தது.

அரசு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் நடந்த இந்த உள்நாட்டு போரில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனால், பல ஆண்டுகளாக நீடித்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், டர்பர் மாகாணத்தில் உள்ள கிளர்ச்சியாளர்களும் அரசுப்படையினரும் போர் நிறுத்தத்தை மீறி அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டர்பர் மாகாணத்தில் கடந்த 2 நாட்களாக மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப்படையினருக்கும் இடையே நடந்த கடுமையான மோதல் 83 பேர் உயிரிழந்துள்ளனர். சண்டையில் 160 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Tags:    

Similar News