செய்திகள்
கோப்புப்படம்

இத்தாலியில் முதியோர் இல்லத்தில் விஷவாயு கசிந்து 5 நோயாளிகள் பலி

Published On 2021-01-16 20:52 GMT   |   Update On 2021-01-16 21:06 GMT
இத்தாலியில் முதியோர் இல்லத்தில் விஷவாயு தாக்கியதில் நோயாளிகள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரோம்:

இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் அருகே உள்ள லனுவியோ என்ற நகரில் வில்லா டெய் டைமெண்டி என்ற முதியோர் இல்லம் உள்ளது. இங்கு 10-க்கும் அதிகமான முதியோர்களும் அவர்களுக்கு உதவியாக மருத்துவ ஊழியர்களும் செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில், அந்த முதியோர் இல்லத்தில் நேற்று அதிகாலை திடீரென கார்பன் மோனாக்சைடு என்ற விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. முதியோர் இல்லத்தில் அனைவரும் உறங்கிகொண்டிருந்தபோது இந்த வாயுவை சுவாசித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுயநினைவை இழந்தனர்.

முதியோர் இல்லத்திற்கு காலை வேலைக்கு வந்த ஊழியர் சக ஊழியர்கள் மற்றும் தங்கியிருந்தோர் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக, அவர் மீட்பு குழுவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மயங்கிக்கிடைந்த அனைவரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

மயங்கி இருந்தவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் விஷவாயு தாக்கியதில் முதியோர் இல்லத்த்ல் இருந்த 5 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். 7 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக இத்தாலி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Tags:    

Similar News