செய்திகள்
போதைப்பொருள்

மார்ஷல் தீவில் கைவிடப்பட்ட படகில் ரூ.600 கோடி போதைப்பொருள்

Published On 2020-12-17 19:48 GMT   |   Update On 2020-12-17 19:48 GMT
பசிபிக் தீவு நாடான மார்ஷல் தீவில் கைவிடப்பட்ட படகு ஒன்றில் 649 கிலோ எடையுள்ள கொகைன் போதைப்பொருள் பிடிபட்டுள்ளது.
மஜூரோ:

பசிபிக் தீவு நாடான மார்ஷல் தீவில் கைவிடப்பட்ட படகு ஒன்றில் 649 கிலோ எடையுள்ள கொகைன் போதைப்பொருள் பிடிபட்டுள்ளது. இதன் மதிப்பு 80 மில்லியன் டாலர் (சுமார் ரூ.600 கோடி) ஆகும். இது சாதனை அளவாக பார்க்கப்படுகிறது. இந்த போதைப்பொருள் எரித்து அழிக்கப்பட்டது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது, “பிடிபட்ட கொகைன் போதைப்பொருளை செவ்வாய்க்கிழமையன்று எரித்து அழித்து விட்டோம். இரண்டு பாக்கெட்டு அளவில் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது” என தெரிவித்தனர்.

இந்த போதைப்பொருளை சுமந்து வந்து கரை ஒதுங்கிய படகு, ஐலுக் அட்டோல் என்ற இடத்தில் உள்ளூர்வாசி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. உள்ளூர்வாசிகள் அந்த படகை நகர்த்த முயற்சித்து அது முடியாமல் போய் உள்ளது. இந்த படகு ஒரு வருடத்துக்கு மேலாக நகர்ந்து வந்திருக்கக்கூடும், இது பெரும்பாலும் மத்திய அல்லது தென்அமெரிக்காவில் இருந்து வந்திருக்கலாம் என மார்ஷல் தீவு அட்டார்னி ஜெனரல் ரிச்சர்டு ஹிக்சன் தெரிவித்தார்.
Tags:    

Similar News