செய்திகள்
போரிஸ் ஜான்சன்

இந்தியாவின் சோலார் மின் திட்டங்கள் சிறப்பானவை - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராட்டு

Published On 2020-12-14 02:18 GMT   |   Update On 2020-12-14 02:18 GMT
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சோலார் மின்சக்தி திட்டத்தில் இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் சிறப்பானவை என கூறி வெகுவாக பாராட்டினார்.
லண்டன்:

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் 5-ம் ஆண்டு தினத்தை ஒட்டி உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பருவநிலை மாநாடு காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

இதில் உரையாற்றிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சோலார் மின்சக்தி திட்டத்தில் இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் சிறப்பானவை என கூறி வெகுவாக பாராட்டினார்.

மேலும் காலநிலை மாற்றத்தில் இருந்து உலகம் எதிர்கொள்ளும் அவசரநிலை கொரோனா வைரஸ் தொற்று நோயை காட்டிலும் மிகவும் அழிவுகரமானது என அவர் எச்சரித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “நாம் ஒரு மிகப்பெரிய பெரிய சோலார் மின் திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். சோலார் மின் திட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் செய்த சிறப்பான செயல்களை நாம் பின்பற்றுவோம்” என்றார்.

மேலும் அவர் “இன்று பசுமை தொழில் புரட்சிக்கான ஒரு அருமையான பாதையில் கால் எடுத்து வைக்கிறோம். 2030-ம் ஆண்டளவில் இங்கிலாந்தை காற்றாலை மின் உற்பத்தியில் சவுதி அரேபியாவாக மாற்ற விரும்புகிறோம்” எனவும் கூறினார்.
Tags:    

Similar News