செய்திகள்
கொரோனா தடுப்பு மருந்து

மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்: ஜப்பான் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்

Published On 2020-12-02 17:09 GMT   |   Update On 2020-12-02 17:09 GMT
ஜப்பான் நாடாளுமன்றம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதற்கான மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
ஜப்பானின் மிகவும் சக்திவாய்ந்த கீழ் சபையின் ஒப்புதலுக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் மேல் சபையிலும் இன்று நிறைவேற்றப்பட்டதால் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. நோய்த்தடுப்பு மருந்துகளை நிர்வகிக்கும் பொறுப்பை உள்ளூர் அரசாங்கங்கள் ஏற்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டின் முதல் பாதியில் நாட்டு மக்களுக்கு போதுமான அளவு தடுப்பூசிகளை பெறமுடியும் என்று ஜப்பான் பிரதமர் யோசிஹைட் சுகா உறுதியளித்துள்ளார். இது நாட்டின் மோசமான தொற்றுநோயுடன் போராடுகையில், கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான ஒரு முக்கிய திட்டத்தை வழங்குகிறது என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது

தடுப்பூசிகளிலிருந்து உருவாகும் சுகாதாரப் பிரச்சினைகளால் ஏற்படும் எந்தவொரு இழப்பிற்கும் தனியார் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்க இந்த மசோதா அரசாங்கத்தை அனுமதிக்கிறது. தடுப்பூசிகளை வழங்க ஜப்பான் அரசு மாடர்னா இன்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது,

மேலும் அஸ்ட்ரா ஜெனேகா பி.எல்.சி மற்றும் ஃபைசர் இன்க் ஆகியவற்றுடன் அடிப்படை ஒப்பந்தங்களையும் செய்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் ஜப்பானில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News