செய்திகள்
நீதிமன்றம்

போதை மாத்திரைகள் கடத்தல்- ஆப்கானிஸ்தான் வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில்

Published On 2020-11-13 06:49 GMT   |   Update On 2020-11-13 06:49 GMT
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் போதை மாத்திரைகள் கடத்தியது தொடர்பாக கைதான ஆப்கானிஸ்தானை சேர்ந்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
துபாய்:

துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 24 வயது வாலிபர் வந்தார். அவர் விமானத்தில் இருந்து இறங்கியதும் அவரது உடைமைகளை எடுத்து விட்டு வெளியில் செல்ல முற்பட்டார். அப்போது அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் வாலிபரின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் சுமார் ஒரு கிலோ அளவுக்கு 72 ஹெராயின் போதை மாத்திரைகள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு துபாய் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 50 ஆயிரம் திர்ஹாம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனைக் காலம் முடிந்த பின்னர் அவரை நாடு கடத்தவும் உத்தரவு பிறப்பித்தது.
Tags:    

Similar News