செய்திகள்
இந்தியா புறப்படும் மைக் பாம்பியோ

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம்

Published On 2020-10-25 20:59 GMT   |   Update On 2020-10-25 20:59 GMT
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக்கேல் பாம்பியோ மந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் பங்கேற்க இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியாக இருப்பவர் மைக்கேல் பாம்பியோ.  புதுடெல்லியில் நடைபெறவுள்ள மந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் இந்தியாவுக்கு புறப்பட்டார்.

அவருடன் பாதுகாப்பு செயலாளர் மார்க் டி எஸ்பர் பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணம் 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும், அவர் இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்ய இருக்கிறார்.

இந்த பயணத்தில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் அச்சுறுத்தல்களை முறியடிக்க சுதந்திர நாடுகள் எப்படி இணைந்து பணியாற்ற முடியும் என்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவரது இந்த சுற்றுப்பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Tags:    

Similar News