செய்திகள்
ஜார்ஜின் கழுத்தை நெரிக்கும் டெரிக்

அமெரிக்கா: ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழக்க காரணமான போலீஸ் அதிகாரி ஜாமீனில் விடுதலை

Published On 2020-10-07 23:36 GMT   |   Update On 2020-10-07 23:36 GMT
அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் கருப்பினத்தவர் 2 போலீஸ் அதிகாரிகளின் பிடியில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய போலீஸ் அதிகாரி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் மினிசபோலி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடந்த மே மாதம் 25 கள்ளரூபாய் நோட்டை மாற்ற முயற்சி நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற 4 போலீசார் சோதனை நடத்த வந்தனர். அப்போது சந்தேகத்தின் பெயரில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவரை போலீசாஸ் கைது செய்ய முற்பட்டனர்.

அப்போது, ஜார்ஜ் பிளாய்ட் கைதிற்கு ஒத்துழைப்பு தர மறுத்த்தார். இதனால் டேரிக் ஸ்யவின் என்ற போலீஸ் அதிகாரி ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தில் தனது முழங்காலை வத்து நெரித்தார்.

டெரிக் ஸ்யவின் தொடர்ந்து 8 நிமிடங்கள் 48 வினாடிகள் ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தை தனது முழங்காலால் நெரித்தார். இதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக ஜார்ஜ் பிளாய்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தை போலீஸ் முழங்காலால் நெரிப்பதும் அதனால் அவர் உயிரிழப்பதும் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், இந்த சம்பவத்தை கண்டித்தும், ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதிகேட்டும் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. 

இதற்கிடையில், ஜார்ஜ் பிளாய்ட் சம்பவம் தொடர்பாக 4 போலீசார் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. அதில், டெரிக் ஸ்யவின் கைது செய்யப்பட்ட போலீசார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தில் தனது முழங்காலால் நெரித்தவரும் பிளாய்ட்டின் மரணத்திற்கு முக்கிய காரணமானவருமான டெரிக் ஸ்யவினுக்கு மினிசபோலி நகர நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியுள்ளது. 

இதையடுத்து, டெரிக் நேற்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். டெரிக் 1 மில்லியன் டாலரை பிணைத்தொகையாக கட்டியதையடுத்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News