செய்திகள்
துபாய் பட்டத்து இளவரசர் ஒட்டகங்களுக்கு உணவளிக்கும் காட்சியை படத்தில் காணலாம்.

ஒட்டகங்களுக்கு உணவளித்த துபாய் பட்டத்து இளவரசர்

Published On 2020-09-18 03:47 GMT   |   Update On 2020-09-18 03:47 GMT
துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் ஒட்டகங்களுக்கு தன் கையால் உணவு வழங்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
துபாய்:

துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் பிராணிகள் மற்றும் மற்ற விலங்கினங்களிடம் மிகுந்த பாசத்துடன் பழகும் பண்புடையவர். அவர் சொந்தமாக பல்வேறு வனவிலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார்.

சமீபத்தில் தனது விலை உயர்ந்த சொகுசு காரை சிறு பறவை கூடு கட்டி வாழ அளித்து அனைவரின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றார். அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தனது காரில் ஒட்டகங்கள் பராமரிப்பு பகுதிக்கு சென்றார். அவர் சென்றதும் ஒட்டகங்கள் கூட்டமாக அவரது வாகனத்தை சூழ்ந்து கொண்டன.

பின்னர், அருகில் அமர்ந்துள்ளவர் தட்டில் உணவை வைத்து கொடுக்க அதனை பட்டத்து இளவரசர் எடுத்து தருகிறார். அந்த ஒட்டகங்கள் அதனை ஆர்வத்துடன் வந்து சாப்பிட்டன. அதிலும் ‘எமார்’ மற்றும் ‘பர்ரிஸ்’ என்ற பெயரில் உள்ள ஒட்டகங்களை அழைத்து வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார்.

இதையடுத்து, அந்த காரை விட்டு இறங்கி அதன் முன்புறத்தில் இலை, தழைகளை வைத்து அனைத்து ஒட்டகங்களுக்கும் உணவளித்தார். ஒட்டகங்களுடன் அவர் உரையாடி உணவளித்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அவருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
Tags:    

Similar News