செய்திகள்
இம்ரான்கான்

ஏர் இந்தியா விமான விபத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டதையறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

Published On 2020-08-08 00:08 GMT   |   Update On 2020-08-08 00:08 GMT
ஏர் இந்தியா விமான விபத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டதையறிந்து மிகுந்த வருத்தம் அடைந்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 173 பேர் படுகாயமடைந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 15 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில், கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’கேரளா மாநிலத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதையும், அதனால் அப்பாவி மக்கள் உயிரிழந்ததையும் கேள்விப்பட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். இந்த கடினமான நேரத்தில் துயரமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு கடவுள் வலிமையை கொடுப்பார்’ என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News