செய்திகள்
நேபாள பிரதமர் ஒலி

ராமர் குறித்த நேபாள பிரதமரின் கருத்துக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்

Published On 2020-07-14 21:02 GMT   |   Update On 2020-07-14 21:02 GMT
ராமர் குறித்த நேபாள பிரதமரின் கருத்துக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
காத்மாண்டு:

ராமரின் பிறப்பிடமாக கோடிக்கணக்கான இந்துக்களால் நம்பப்படும் இந்தியாவில் உள்ள அயோத்தி நகரம் என்பது உண்மையில் அவரது பிறப்பிடம் இல்லை என்றும், காத்மண்டு அருகே உள்ள அயோத்தி என்ற சிறு கிராமம்தான் ராமரின் உண்மையான பிறந்த இடம் என நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராமர் தெரிவித்தார். 

அதேபோல், கடவுள் ராமர் ஒரு நேபாளி என்றும், அவர் இந்தியர் அல்ல என்றும் ஒலி தெரிவித்தார்.

நேபாள பிரதமரின் இந்த கருத்துக்கு இந்திய அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், நேபாள பிரதமர் கருத்து குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது.

அதில், ராமர் பற்றி பிரதமர் சர்மா ஒலி தெரிவித்தது அரசியல் ரீதியான கருத்து அல்ல. அயோத்தியின் மாண்பை குறைக்கும் வகையில் கேபி சர்மா ஒலி அந்த கருத்தை தெரிவிக்கவில்லை. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் கேபி சர்மா ஒலி கூறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News